திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருகேயுள்ள ஆறுமுகநேரி பூவரசூரைச் சேர்ந்தவர் மிகாவேல். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருச்செந்தூர் மற்றும் ஆறுமுகநேரி போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்தார். இவர் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்த நிலையில் மிகாவேல் சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு, கடந்த 15 நாட்களுக்கு முன்னர் மிகாவேல் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில் 2020ம் ஆண்டு ஆறுமுகநேரியில் பணியாற்றிய போது அப்பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது திருச்செந்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் மிகாவேல் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
Advertisement