சென்னை: சென்னை சைதாப்பேட்டையில் முகேஷ் (25) என்பவரை விசாரிக்க சென்றபோது போலீசாரையே சிறைவைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. முகேஷின் சகோதரர் ஜெயரத்தினம், கேட்டை பூட்டி காவலர்களை சிறைவைத்ததால் பரபரப்பு நிலவியது. கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு சிறைபிடிக்கப்பட்ட போலீசார் மீட்கப்பட்ட நிலையில் குமரன் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement


