Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டுமென அன்புமணி தற்கொலை மிரட்டல், காலை பிடித்து அழுதார்கள்: ராமதாஸ்

விழுப்புரம் : பாஜகவுடன் கூட்டணி வைக்காவிட்டால் தற்கொலை செய்வேன் என்று அன்புமணி மிரட்டினார் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டி உள்ளார். அன்புமணி உடனான மோதல் குறித்து விழுப்புரம் தைலாபுரத்தில் ராமதாஸ் அளித்த பேட்டியில், "அதிமுக - பாமக கூட்டணியே இயற்கையான கூட்டணி. அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பதை அன்புமணி கேட்கவில்லை. பாஜகவுடன் கூட்டணி வைக்காவிட்டால் தற்கொலை செய்வேன் என்று அன்புமணி மிரட்டினார். பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை எனக்கு தெரியாமலேயே நடந்துவிட்டது. பா.ஜ.க.வுடன் கூட்டணி வைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தவர் சவுமியா அன்புமணி. பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என சவுமியாவும் அன்புமணியும் ஆளுக்கு ஒரு காலை பிடித்து என்னிடம் அழுதனர்.வேறு வழியின்றி சம்மதித்தேன்.

அதிமுக-வோடு சேர்ந்திருந்தால் குறைந்தது மூன்று இடமாவது கிடைத்திருக்கும்; அவர்களும் 6-7 இடங்களுக்கு மேலேவே ஜெயித்திருப்பார்கள். எனக்கு விருப்பமில்லாமல் எல்லோரும் சேர்ந்து அன்புமணிக்கு பதவி கொடுத்தனர். மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் 8 பேர் மட்டுமே கலந்து கொண்டபோதே நான் செத்துப் போய்விட்டேன். எனது தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க கூடாது என நிர்வாகிகளை தடுத்துவிட்டார். என்னை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ராமதாஸ் எடுக்கப் போகிறார் என்று அன்புமணி பொய் சொன்னார்.அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து அன்புமணி நீக்கிவிடுவேன் என்பது கற்பனை கூட செய்ய முடியாது. அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து அன்புமணியை நான் நீக்குவேன் என்பதை உலகம் ஏற்குமா?. பாமக செயல் தலைவராக செயல்படுவேன் என்று அன்புமணி பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். செயல் தலைவராக செயல்படுவேன் என்று அன்புமணி கூறினால் அது எல்லா பிரச்சனைக்கு தீர்வாகும். தொண்டனாக இருந்து கட்சியை வளர்ப்பேன் என்று தொண்டர்களிடம் அன்புமணி கூறினால் பிரச்சனை தீரும்,"இவ்வாறு தெரிவித்தார்.