Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பெருவில் கண்டறியப்பட்ட 5 ஆயிரம் ஆண்டு பழமையான நகரம்: வணிக மையமாக இயங்கிய தொன்மை நகரம் கண்டுபிடிப்பு

பெரு: பெருநாட்டில் 3,500 ஆண்டு பழமையான நகரத்தை தொல்லியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். கடல் மட்டத்தில் இருந்து 1970 அடி உயரத்தில் உள்ள மறைப்பகுதி மண்ணாலும், கற்களாலும் கட்டப்பட்ட வீடுகள் கட்டடங்களை கொண்டு பழங்கால நகரத்தை டிரோன் காட்சிகள் வெளியிட்டுள்ளனர் தொல்லியல் ஆய்வாளர்கள். இந்த இடம் பசுபிக் கடலோர பகுதிகளையும், அந்தஸ் மற்றும் அமேசானை இணைக்கும் வணிக மையமாக அமைத்திருக்கலாம் என்று கணிக்கிறார்கள் ஆய்வாளர்கள். பரகா மாகாணத்தில் உள்ள பெனிகோ என்ற இந்நகரம் கிமு1200 மற்றும் 1500 ஆண்டுகள் காலத்தை ஒட்டியதாக இருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது.

அமெரிக்காவின் மிக பழமையான 5000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காரல் சுப் நாகரிகத்தின் தொடர்ச்சியாக இந்த இடம் பார்க்கப்படுகிறது. 5000ன் ஆண்டுகளுக்கு முற்பட்ட காரல் நாகரிகம் பழமையான 32 கட்டமைப்புகள் எகிப்த், இந்தியா, சுமேரியா மற்றும் சீனா நாகரிகங்களில் சம காலத்து நாகரிகமாக கருதப்படுகிறது. பெனிகோவில் தொழில் ஆய்வாளர்கள் தொடர்ந்து தங்களது ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள். காரல் நாகரிகம் இயற்கை பேரிடர்களால் அழிந்து இருக்கும் கூடும் என வல்லுநர்கள் கருதும் வேளையில், புதிதாக கண்டறியப்பட்ட இந்த தொல் நகரம் பல மர்மங்கள் கட்டவிழ்க்கும் என்று தொல்லியல் அறிஞர்கள் நம்புகிறார்கள்.