Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பெரியமுல்லைவாயல் ஏரியில் மணல் கொள்ளை: 9 பேர் கைது

பொன்னேரி: மீஞ்சூர் அருகே உள்ள பெரிய முல்லைவாயல் ஏரியில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட 9 பேர் கைது செய்யப்பட்டு நான்கு லாரிகள், ஒரு மண் அள்ளும் இயந்திரத்தை பறிமுதல் செய்து போலீசார் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர். மீஞ்சூர் அடுத்த பெரியமுல்லைவாயல் ஏரியில் இரவு நேரங்களில் மணல் கொள்ளை நடப்பதாக ஆவடி மாநகர காவல் ஆணையர் சங்கர் உத்தரவின் பேரில் தனிப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் பெயரில் காவல் ஆணையரின் தனிப்படை உதவி ஆணையர் அசோகன் ஆய்வாளர் ரமேஷ் ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் நேற்று மாலை பெரியமுல்லைவாயல் ஏரியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது லாரிகளில் ஏரியிலிருந்து சட்ட விரோதமாக மணல் கொள்ளை நடப்பது தெரிய வந்தது. காவல்துறையினரை கண்டதும் தப்பி ஓட முயன்றவர்களை காவல்துறையினர் சுற்றி வளைத்து பிடித்தனர். தொடர்ந்து மணல் கொள்ளைக்காக பயன்படுத்தப்பட்ட நான்கு லாரிகள், ஒரு மணல் அள்ளும் இயந்திரத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்து மீஞ்சூர் காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

மீஞ்சூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் காளி ராஜ் மணல் கொள்ளையில் ஈடுபட்ட மாரிமுத்து, விக்னேஷ், ரவீந்திரன், சங்கர், தனபால், சதீஷ்குமார், கணேசமூர்த்தி, கோடீஸ்வரன், பிரவீன் குமார் ஆகிய 9 பேரை கைது செய்தனர் இது தொடர்பாக சோழவரம் நீர்வளத்துறை உதவி பொறியாளர் சுந்தரம் அளித்த புகாரின் பேரில் மீஞ்சூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து 9 பேரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.