தென்காசி: ஆலங்குளத்தில் இடி, மின்னலுடன் கூடிய பெய்த பலத்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆலங்குளம் சுற்றியுள்ள காளத்திமடம், நல்லூர், அடைக்கலப்பட்டணம், பாவூர்சத்திரம், ஆகிய பகுதிகளில் மழை பெய்துள்ளது. கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் தற்போது பெய்த மழையால் வெப்பம் தணிந்தது.
Advertisement


