Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தொடர் குற்றங்களில் ஈடுபட்ட 14 பேர் குண்டாசில் கைது: காவல்துறை நடவடிக்கை

திருவொற்றியூர்: சென்னையில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை கைது செய்யவும், குற்றச் செயல்கள் நடக்காமல் தடுக்கவும், பல்வேறு குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில், போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து வருகின்றனர்.

அதன்படி, ஆந்திர மாநிலம் குண்டூரில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் கஞ்சா கடத்தி வந்த பிரபல கஞ்சா வியாபாரி நசீனா சாய்(26), இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய சேலம் மாவட்டம் அம்மாபேட்டையை சேர்ந்த இளவரசன்(30), மெரினா கடற்கரை பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வந்த திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த கார்த்திக் (25), மயிலாப்பூர் பகுதியை சேர்ந்த அய்யனார்(24), திருமங்கலம் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட மேற்கு அண்ணாநகரை சேர்ந்த விஜய்(27),

கிண்டி பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட சீனிவாசன்(26), கஞ்சா விற்பனை செய்து வந்த கேமரா மாநிலத்தை சேர்ந்த ஆகாஷ்(29), கொடுங்கையூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வந்த அயனாவரத்தை சேர்ந்த யோகராஜ் (33), மாதவரம் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட கார்த்திக்(23), வடக்கு கடற்கரை பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட திருவொற்றியூரை சேர்ந்த நசிர் பாஷா(22),

புளியந்தோப்பை சேர்ந்த அஜித்குமார்(22), திருவொற்றியூர் பகுதியில் ரஞ்சித் என்பவரை கொலை செய்ய முயன்ற வழக்கில் வண்ணாரப்பேட்டையை சேர்ந்த யுவராஜ்(23), திருவொற்றியூரை சேர்ந்த கோகுல்(24), ஆயிரம் விளக்கு பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட அஜித்குமார்(25) ஆகிய 14 பேரை சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவுப்படி போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.