மக்களை திசை திருப்ப ஆதாரமற்ற அவதூறு கருத்துகளை பாஜக தலைவர்கள் பரப்புகின்றனர்: காங். தலைவர் செல்வப்பெருந்தகை சாடல்
சென்னை: மோடி, அமித்ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் அவதூறு பரப்புகின்றனர் என காங். தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். மக்களை திசை திருப்ப ஆதாரமற்ற அவதூறு கருத்துகளை பாஜக தலைவர்கள் பரப்புகின்றனர். தமிழகத்தில் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்காததால் சோனியா குடும்பம் மீது சேற்றை வாரி இறைத்துள்ளனர். ஊழலை ஒழிப்பதாகக் கூறும் மோடி ரூ.7.5லட்சம் கோடி நெடுஞ்சாலை முறைகேடு பற்றி வாய் திறப்பதில்லை என செல்வப்பெருந்தகை தெரிவித்திருக்கிறார்.