பென்னாகரம் அருகே சாலையோரம் நடந்து சென்ற பெண்கள் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
தருமபுரி: பென்னாகரம் அருகே உள்ள பொத்தானூரில் 100 நாள் வேலைக்கு, சாலையோரம் நடந்து சென்ற இரண்டு பெண்கள் மீது அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் ராதா என்ற பெண் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த லட்சுமி என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தை ஏற்படுத்திய நபரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.