Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மயில் சிலந்தி (Peacock spider)

சிலந்தி இனத்தில் ஒரு வகைதான் மயில் சிலந்தி. தாவும் சிலந்தி வகையில் மயில் சிலந்தியும் ஒன்று. மராடஸ் வோலன்ஸ் (Maratus volans) என்ற இனத்தைச் சார்ந்தது இவ்வகைச் சிலந்திகள். சிலந்தி வகைகளில் மிகவும் அழகான சிலந்தி மயில் சிலந்தி. இதன் அழகான நடனமே இதற்குக் காரணப்பெயராக அமைந்தது.

இந்தச் சிலந்தியின் முதுகுப் பகுதியில் நீலம், சிவப்பு, மஞ்சள், பச்சை போன்ற நிறங்கள் இருக்கும். இனச் சேர்க்கைக்கு முன்பாகப் பெண் சிலந்தியை உடன்படச் செய்வதற்காக ஆண் சிலந்தி வயிற்றுப்பகுதியை உயர்த்தி தனது மூன்று ஜோடிக் கால்களையும் உயர்த்தி ஆடத் தொடங்கும். பெண் சிலந்திகளில் இந்த நிறங்கள் மிகவும் வெளிறிக் காணப்படும். பொதுவாக இந்த நடனம் ஐந்து நிமிடம் முதல் ஐம்பது நிமிடங்கள் வரை தொடரும். இந்தச் சிலந்திகளால் மனிதனுக்கு எந்தவித ஆபத்தும் இல்லை.