புதுடெல்லி: கட்சி கட்டமைப்பை மாற்றுவது குறித்து காங்கிரஸ் கட்சி நேற்று அவசர ஆலோசனை நடத்தியது. காங்கிரஸ் செயற்குழு கூட்டம் வருகிற ஏப்.8 மற்றும் 9ம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் ஒவ்வொரு கிராம பஞ்சாயத்து வாரியாக கட்சி கட்டமைப்பை வலுப்படுத்துவது தொடர்பாக நேற்று டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடந்தது. கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, பொருளாளர் அஜய் மாகென், காங்கிரஸ் பொதுச்செயலாளர்கள் கே.சி. வேணுகோபால், பூபேஷ் பாகெல், ரமேஷ் சென்னிதாலா உள்ளிட்ேடார் கலந்து கொண்டனர். அப்போது கட்சியை பலப்படுத்துவது தொடர்பாக அனைவரது ஆலோசனைகளும், கருத்துக்களும் கேட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Advertisement