புதுடெல்லி: மாநிலங்களவையில் ஒன்றிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கேள்வி ஒன்றுக்கு அளித்த பதிலில் கூறியதாவது: இரு அவைகளிலும் எம்பிக்கள் கேள்விகள் கேட்டு அமைச்சர்கள் பதிலளித்தால், அந்த உறுதிமொழி நிறைவேற்றப்படுவது மிகவும் முக்கியம். அரசால் வழங்கப்படும் உறுதிமொழிகள் 3 மாதத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் இவ்வாறு கூறினார்.
இது குறித்து பதிலளித்த நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் எல்.முருகன், ‘’இதுவரை 99 சதவீத உறுதிமொழிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நிலுவையில் உள்ள உறுதிமொழிகள், காலக்கெடுவை பின்பற்ற சம்மந்தப்பட்ட அமைச்சர்கள் உள்ளிட்டோருக்கு ஓஏஎம்எஸ் அமைப்பு சரியான நேரத்தில் எச்சரிக்கைகளை அனுப்புகிறது. இது குறித்த புதுப்பிப்புகளை நேரடியாக இதில் பதிவு செய்யலாம். இவற்றை எம்பிக்கள் உள்ளிட்டோர் துல்லியமான மற்றும் புதுப்பித்த தகவல்களை பெறுவதை உறுதி செய்கிறது’’ என்றார்.