Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பரந்தூர் விமான நிலைய திட்டம்: நிலம் கையகப்படுத்த தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

சென்னை: பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்த தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பரந்தூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள 20 கிராமங்களை உள்ளடக்கி பசுமை விமான நிலையம் அமைக்க தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. பரந்தூரில் 5,476 ஏக்கர் பரப்பளவில் பசுமை விமான நிலையம் அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

விமான நிலையம் அறிவிப்பு வெளியிட்ட நாள் முதல் ஏகனாபுரம் கிராம மக்கள், தங்கள் விவசாய நிலங்கள், குடியிருப்புகள், நீர்நிலைகள் உள்ளிட்ட வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்படுவதாக கூறி விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்ட போராட்டங்களை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். மேலும், நாள்தோறும் கிராம மைதானத்தில் ஒன்று திரண்டு 797வது நாளாக தொடர் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.

கிராம மக்கள் போராட்டம் நடத்தி வந்தாலும் அது குறித்து எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் விமான நிலையம் அமைக்க நிலம் எடுக்கும் பணிகள் தீவிரமடைந்து உள்ளன. இந்நிலையில், பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்த தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஏகனாபுரம் கிராமத்தில் உள்ள மொத்தம் 445 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. நில உரிமையாளர்கள் ஆட்சேபனை இருந்தால் ஒரு மாதத்திற்குள் கருத்து தெரிவிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.