Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பனகல் அரசர் பிறந்தநாள் முதல்வர் புகழாரம்

சென்னை: சென்னை மாகாண முன்னாள் முதல்வர் பனகல் அரசர் பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: இடஒதுக்கீடு நமது உரிமை என இன்று நாம் தலைநிமிர்ந்து முழங்க நூறாண்டுகளுக்கு முன்பே கம்யூனல் ஜிஓ மூலம் வழிவகுத்த சமூகநீதி நாயகர், திருச்செந்தூரில் வெகு விமரிசையாக நடந்த குடமுழுக்கு போல 3000+ கோயில்களில் இந்து சமய அறநிலையத் துறை நடத்தியிருக்கிறது, தமிழ்நாடெங்கும் ஆயிரக்கணக்கான கோயில்கள் குறிப்பிட்ட எந்த வகுப்பாரிடமும் சிக்காமல் முறையாக நிர்வகிக்கப்படுகிறது என்றால் அவற்றுக்கெல்லாம் அன்றே இந்து சமய அறநிலையச்சட்டம் இயற்றி விதையூன்றியவர், ஆதிதிராவிட மக்களின் மாண்பை காப்பதில் உறுதியாக நின்ற தீரர். நீதிக்கட்சியின் நீட்சியாக, எல்லாருக்கும் எல்லாம் என்ற சமத்துவப் பாதையில் நமது அரசு சாதிக்க அடித்தளமிட்ட பனகல் அரசர் பிறந்தநாளில் அவர் பங்களிப்புகளைப் போற்றி வணங்குகிறேன்.