Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பாகிஸ்தானால் இந்தியாவில ஒரு கண்ணாடியைக்கூட உடைக்க முடியவில்லை: அஜித் தோவல் பேச்சு

சென்னை: பாகிஸ்தானால் இந்தியாவில ஒரு கண்ணாடியைக்கூட உடைக்க முடியவில்லை என அஜித் தோவல் தெரிவித்துள்ளார். சென்னை ஐஐடியின் 62வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கலந்து கொண்டார். இதில் 3227 மாணவர்களுக்கு அவர் பட்டங்களை வழங்கி கெளரவித்தார். தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர்; கடந்த 7 ஆண்டுகளாக நான் எந்த பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டதில்லை. ஆனால், சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி, நிச்சயம் நீங்கள் இந்த நிகழ்ச்சிக்கு வர வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

அதனால்தான் இந்த நிகழ்ச்சிக்கு நான் வந்தேன். மிகப் பாரம்பரியமிக்க சென்னை ஐஐடியில் நீங்கள் (மாணவர்கள்) படித்திருக்கிறீர்கள் என்பதை மிகப்பெரிய கெளரவமாகவும், பெருமையாகவும் நீங்கள் கருத வேண்டும். இதைவிட, நீங்கள் இந்தியாவில் பிறந்ததை நினைத்து பெருமைப்பட வேண்டும் என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர்; பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத தளங்கள் மீது நாம் துல்லிய தாக்குதல் நடத்தினோம்; பிரமோஸ் ஏவுகணை மூலம் பாகிஸ்தானின் 9 தீவிரவாத இலக்குகளை 23 நிமிடங்களில் தாக்கி அழித்தோம். பாகிஸ்தானால் இந்தியாவில் ஒரு கண்ணாடியைக்கூட உடைக்க முடியவில்லை; பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் இந்தியாவில் ஏற்பட்ட சேதம் தொடர்பாக ஒரு புகைப்படத்தையாவது காட்ட முடியுமா?

ஆனால், நாம் பாகிஸ்தானை தாக்கிய ஆதாரங்களை இந்த உலகிற்குக் காட்டினோம். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் நாம் ஏற்படுத்திய பல சேதாரங்களை இன்னும் முழுமையாக வெளியில் சொல்லவில்லை. இந்தியாவின் தாக்குதலில் சேதமடைந்த பாகிஸ்தானின் விமானப்படைத் தளங்கள் இன்னும் சரிசெய்யப்படவில்லை. இந்தியாவின் தாக்குதலுக்கு இதுவே சான்று. பாதுகாப்புத் துறைக்காக இந்தியாவில் அதிகளவில் நிதி ஒதுக்கப்படுகிறது. நம்முடைய தொழில்நுட்பத்திற்காக நாம் பெருமைப்பட வேண்டும். சிறந்த கல்வி, தொழில்நுட்பம் கொண்ட நாடாக இந்தியா மாறியுள்ளது என்று கூறினார்.