நெல்லையில் பயனாளிக்கு முறையாக இன்சூரன்ஸ் வழங்காததால் வட்டியுடன் தர நிறுவனத்துக்கு குறைதீர் ஆணையம் உத்தரவு!!
திருநெல்வேலி: நெல்லையில் பயனாளிக்கு முறையாக இன்சூரன்ஸ் வழங்காததால் வட்டியுடன் தர நிறுவனத்துக்கு குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது. செல்வராஜ் என்பவர் மருத்துவ காப்பீடு திட்டத்தில் மாதாந்திர தொகை செலுத்தி வந்துள்ளார். இருதய நோயால் பாதிக்கப்பட்ட செல்வராஜ் ரூ.4.85 லட்சம் செலவில் தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்தார். மருத்துவ செலவை இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் கோரிய போது ரூ.2 லட்சம் மட்டுமே தொகை வழங்கப்பட்டுள்ளது. இன்சூரன்ஸ் நிறுவனம் ரூ.2.82 லட்சம் காப்பீடு தொகையுடன் வழக்குச் செலவாக ரூ.10,000ம் வழங்க குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


