Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

மோடி கன்னியாகுமரி வருகைக்கு எதிர்ப்பு; சென்னை முழுக்க ஒட்டப்பட்ட ‘கோ-பேக் மோடி’ போஸ்டர்: டிவிட்டரில் டிரெண்டிங்

சென்னை: பிரதமர் மோடி கன்னியாகுமரி வருகையொட்டி அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சென்னை முழுவதும் ஒட்டப்பட்டுள்ள ‘கோ-பேக் மோடி’ போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் இறுதிக்கட்ட பிரசாரம் நேற்று மாலையோடு நிறைவடைகிறது. இதனை தொடர்ந்து வருகிற 1ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தொடர்ந்து ஜூன் 4ம் தேதி முடிவு வெளியாகவுள்ளது. இந்நிலையில் பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூரில் இறுதிகட்ட பிரசாரத்தை பிரதமர் மோடி முடித்து விட்டு நேற்று மாலை விமானம் மூலம் கன்னியாகுமரிக்கு வந்தடைந்தார். இந்நிலையில் மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் மற்றும் திமுக சார்பாக மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் நிலையில் மோடி தனது தியானத்தின் மூலம் இறுதி கட்ட தேர்தலில் வாக்குகளை கவர திட்டமிடுவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் தேர்தல் ஆணையம் பிரதமர் மோடியின் தியானத்திற்கு எந்தவித தடையும் தற்போது வரை விதிக்கவில்லை. இதனிடையே சென்னை முழுவதும் ஒட்டப்பட்டுள்ள ‘கோ-பேக் மோடி’ போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரத்தை முடித்துவிட்டு தமிழ்நாட்டிற்கு வந்த பிரதமர் நரேந்திர மோடியை கண்டித்து சென்னை உயர்நீதிமன்ற திமுக வழக்கறிஞர் ஹேமந்த் அண்ணாதுரை என்பவர் சென்னை முழுவதும் இரவோடு இரவாக #GoBackModi என்ற போஸ்டர்களை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். “ஒடிசா தேர்தல் பரப்புரையில் தமிழர்களை இழிவுபடுத்திவிட்டு, தமிழ்நாட்டிற்கே வருவதா?” என போஸ்டருக்கு தலைப்பிட்டு Hello Netizens… Ready Start 1..2..3.. #GoBackModi என Twitter Trending-க்கு அழைப்புவிடும் வகையிலும், இந்திய தேர்தல் ஆணையமே தூங்காதே…! எனவும் சென்னை முழுவதும் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டரால் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.