Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வெளிநடப்பு எனும் மலிவான அரசியலை எதிர்க்கட்சியினர் செய்துள்ளனர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றசாட்டு

சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிவுற்றதும் கள்ளக்குறிச்சி விவகாரம் பற்றிப் பேசப்படும் என்பதை அறிந்தே, வெளிநடப்பு எனும் மலிவான அரசியலை எதிர்க்கட்சியினர் செய்துள்ளனர் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றசாட்டு தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தை அருந்திய 47 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனால் கள்ளக்குறிச்சி நகராட்சி முழுவதும் மக்கள் வேதனையில் இருக்கிறார்கள். கள்ளச்சாராய பலி எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருவதும் மாநிலம் முழுதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் விஷச் சாராய விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டுள்ளனர். அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் இருக்கையில் அமருமாறு சபாநாயகர் அப்பாவு வேண்டுகோள் விடுத்துள்ளார். எச்சரிக்கையை மீறி தொடர்ந்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டதால் வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். அதனை தொடர்ந்து அதிமுக உறுப்பினர்களை அவைக் காவலர்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றினர். மற்றும் பாஜக, கூட்டணி கட்சிகள், பாமக உள்ளிட்டவற்றை முதலமைச்சர் பதவி விலகி வேண்டும் என்று வலியுறுத்தி வெளிநடப்பு செய்தனர்.

* முதல்வர் எக்ஸ் தள பதிவு

சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிவுற்றதும் கள்ளக்குறிச்சி விவகாரம் பற்றிப் பேசப்படும் என்பதை அறிந்தே, வெளிநடப்பு எனும் மலிவான அரசியலை எதிர்க்கட்சியினர் செய்துள்ளனர் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றசாட்டு தெரிவித்துள்ளார். முதலமைச்சர் இராஜினாமா செய்ய வேண்டும் என்று சொன்னவர்களுக்கு எங்கும் ஓடி ஒளியாமல் இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைப் பட்டியலிட்டுள்ளேன். அவையில் இருந்து கேட்க மனமில்லாமல் அரசியல் ஆதாயங்களுக்காக வெளியேறியவர்கள் இந்தக் காணொளியைக் காணட்டும் என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.