புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்ந்து நடக்கிறது என்றும் இந்தியாவின் கடுமையான நிலைபாட்டினால் பாகிஸ்தான் கப்பல்கள் அதன் துறைமுகங்களுக்கு அருகே நிற்க செய்துள்ளன என இந்திய கடற்படை தலைமை தளபதி தினேஷ் திரிவேதி கூறினார்.
இது பற்றி கடற்படை தலைமை தளபதி தினேஷ் திரிவேதி கூறுகையில்,‘‘பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பின்னர் கடந்த 8 மாதங்களாக மேற்கு அரபி கடல் உள்ளிட்ட பிராந்தியங்களில் இந்திய கடற்படை கப்பல்கள் அதிக செயல்பாட்டு தயார்நிலையை பராமரித்து வருகின்றன. ஆபரேஷன் சிந்தூர் என்பது தொடர் நடவடிக்கை ஆகும். இந்த நடவடிக்கை தொடர்ந்து நடந்து வருகிறது.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிகையின் போது விமானம் தாங்கி போர் கப்பல்கள் உடனே கொண்டு வரப்பட்டதால் பாகிஸ்தான் கடற்படை தனது கப்பல்களை துறைமுகங்களுக்கு அருகே நிற்க செய்துள்ளது.இந்தியா மேற்கொண்ட ராணுவ நடவடிக்கையால்,வணிக கப்பல்கள் பாகிஸ்தானுக்கு வருவதற்கு தயங்குகின்றன. இதனால், பாகிஸ்தானுக்கு கடும் நிதி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானுக்கு பயணிக்கும் கப்பல்களுக்கான காப்பீட்டுச் செலவும் அதிகரித்துள்ளது’’ என்றார்.


