Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தமிழ்நாட்டில் முதன்முறையாக ஆன்லைனில் கட்டட அனுமதி பெறும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: தமிழ்நாட்டில் முதன்முறையாக ஆன்லைனில் கட்டட அனுமதி பெறும் திட்டத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நடுத்தர மக்களின் வீடு கட்டும் கனவை எளிதாக்க தமிழ்நாட்டில் முதல்முறையாக ஆன்லைன் மூலம் கட்டட அனுமதி தொடங்கப்பட்டுள்ளது. www.onlineppa.tn.gov.in என்ற இணையதளம் மூலம் கட்டட அனுமதியை பெறலாம். 2,500 சதுர அடி வரை உள்ள மனையில் 3,500 சதுர அடியில் கட்டப்பட உள்ள வீடுகளுக்கு திட்டம் பொருந்தும். பரிசீலனை மற்றும் கட்டமைப்பு & வசதிக் கட்டணங்களில் இருந்து 100% விலக்கு. கட்டடப் பணி நிறைவடைந்ததும் முடிவுச் சான்று பெற வேண்டியதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் விண்ணப்பதாரர் அளிக்கும் விவரத்தின் அடிப்படையில் உடனடி அனுமதி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.