புதுடெல்லி: கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை அதிகரித்து வந்தது. இந்த நிலையில் ஒன்றிய நுகர்வோர் விவகாரங்களுக்கான அமைச்சக அதிகாரி நேற்று கூறுகையில்,‘‘ தற்போது வெங்காயத்தின் சராசரி விலை கிலோவுக்கு ரூ.54 ஆக உள்ளது. அரசிடம் 4.5 லட்சம் டன் வெங்காயம் கையிருப்பில் உள்ளது. அதில் 1.5 லட்சம் டன் இன்று வரை விற்கப்பட்டுள்ளது. ரயில்கள் மூலம் 4,850 டன் வெங்காயம் டெல்லி,சென்னை,கவுகாத்தி உள்ளிட்ட நகரங்களுக்கு அனுப்பப்பட்டது. டெல்லிக்கு மட்டும் 3170 டன் அனுப்பப்பட்டது. புதிய காரீப் பருவ வரத்து தொடங்கியுள்ளதால் வரும் நாட்களில் வெங்காயத்தின் விலை விரைவில் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது’’ என்றார்.
Advertisement