தென்காசி: தென்காசி அருகே சுந்தரபாண்டியபுரத்தில் உள்ள தனியார் முதியோர் இல்லத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்தார். உணவு ஒவ்வாமை காரணமாக முருகம்மாள், அம்பிகா, சங்கர் ஆகியோர் இறந்த நிலையில் மேலும் ஒருவர் உயிரிழந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தனலட்சுமி என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தனியார் முதியோர் இல்லத்தில் வழங்கப்பட்ட உணவில் ஒவ்வாமை ஏற்பட்டு அடுத்தடுத்து உயிரிழந்தார். தனியார் முதியோர் காப்பகத்திற்கு சீல் வைக்கப்பட்டு நிர்வாகி ராஜேந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார்.
+
Advertisement


