Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஓமன் கடலில் கவிழ்ந்த எண்ணெய் கப்பல்.. 13 இந்தியர்கள் உள்பட 16 பேர் மாயம்: காணாமல் போனவர்கள் கதி என்ன?

மாஸ்கட்: ஓமன் அருகே கடலில் சென்று கொண்டிருந்த எண்ணெய் கப்பல் கவிழ்ந்ததில் 13 இந்தியர்கள் உள்பட 16 பேர் மாயமானார்கள். உலகின் மிகப்பெரிய வர்த்தக போக்குவரத்துகளில் கடல்வழிப் போக்குவரத்தும் ஒன்று. மக்கள் பயணத்தை காட்டிலும் சரக்கு வழிப்போக்குவரத்திற்கு பெரும்பாலோனார் பயன்படுத்துவது கடல்வழி போக்குவரத்தே ஆகும். உலகளவில் சரக்கு கப்பல்கள், எண்ணெய் கப்பல்கள் ஆயிரக்கணக்கில் இயங்கி வரும் நிலையில், வளைகுடா நாடுகளில் எண்ணெய் கப்பல்கள் பயன்பாடு அதிகளவில் இருக்கும்.

அந்த வகையில், ஏமன் நாட்டின் துறைமுகத்தை நோக்கி 117 மீட்டர் நீளமுள்ள பிரஸ்டீஜ் பால்கன் என்ற பெயர் கொண்ட சிறிய ரக எண்ணெய் கப்பல் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த கப்பலில் ஏராளமான ஊழியர்கள் பணியாற்றி வந்தனர். இந்த சூழலில், ஓமன் நாட்டின் துக்ம் துறைமுகத்தின் அருகே உள்ள ராஸ் மட்ராக் நகரத்தின் தென்கிழக்கில் 25 நாட்டிகல் மைல் தொலைவில் திடீரென இந்த எண்ணெய் கப்பல் கவிழ்ந்தது. மிகப்பெரிய எண்ணெய் கப்பலான இந்த கப்பல் கவிழ்ந்ததில் இந்த கப்பலில் இருந்த 16 பேர் மாயமானார்கள். அவர்களில் 13 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். மீதமுள்ள 3 பேர் இலங்கையைச் சேர்ந்தவர்கள்.

எண்ணெய் கப்பல் மாயமான தகவல் உடனடியாக அந்த நாட்டு கடலோர பாதுகாப்பு படையினர் மற்றும் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் மற்றும் மீட்பு படையினர் விரைந்து சென்றனர். மேலும், கப்பலில் இருந்து மாயமான 16 பேரையும் தேடும் பணியை துரிதப்படுத்தியுள்ளனர். 16 பேர் மாயமான சம்பவம் அவர்களின் குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாயமானவர்களை உடனடியாக மீட்டுத்தரக் கோரி, அவர்களது குடும்பத்தினர் அந்த நிறுவனத்திடமும், அதிகாரிகளிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.