செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த பொண்விளைந்த களத்தூர் குட்டைகார தெருவைச் சேர்ந்த சின்னகண்ணு (72) என்வருடைய மனைவி வேதநாயகி (69). இவர் 24 மணி நேரமும் தனது வீட்டில் சட்ட விரோதமாக மதுபானம் விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் பொண்விளைந்த களத்தூருக்கு நேரடியாகச் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது வேதநாயகி வீட்டில் பதுக்கி வைத்திருந்த 20 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் வேதநாயகியயை கைது செய்து, காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Advertisement