சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் பாரில் நடந்த தகராறு சம்பவம் தொடர்பாக அதிமுக நிர்வாகி உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். மதுபானக் கூடத்தில் கடந்த 22ம் தேதி நடனம் ஆடும் போது இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு தரப்பை சேர்ந்த செல்வபாரதி என்பவர் ஏற்கெனவே கைதான நிலையில் மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டனர். அதிமுக ஐ.டி. பிரிவு நிர்வாகி மயிலாப்பூர் பிரசாத், விருகம்பாக்கம் கணேஷ் குமார், நெற்குன்றம் தனசேகர், ஆர்கே சாலை ஜானகிராம், அஜய் வாண்டையார், ராமநாதபுரம் பிரபல ரவுடி சேதுபதி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
Advertisement


