Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

வெறும் மொழி மட்டுமல்ல ஆங்கிலம் நம் முன்னேற்றத்துக்கான கருவி: அமித் ஷாவுக்கு டெரிக் ஓ பிரையன் பதிலடி

புதுடெல்லி: டெல்லியில் கடந்த சில தினங்களுக்கு முன் நடந்த நூல் வௌியீட்டு விழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டு பேசினார். அப்போது, “நம் நாட்டின் மொழிகள் அனைத்தும் நம் பண்பாட்டின் ஆபரணங்கள். இந்த நாட்டில் ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படுவார்கள். அத்தகைய சமுதாயம் உருவாகும் காலம் வெகுதொலைவில் இல்லை” என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் அமித் ஷாவின் பேச்சுக்கு திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான டெரிக் ஓ பிரையன் பதிலடி கொடுத்துள்ளார். டெரிக் ஓ பிரையன் தன் எக்ஸ் பதிவில், “இந்தியாவில் 21 மொழிகள் மற்றும் 19,500 பேச்சு வழக்குகள் உள்ளன. இந்தியா போன்ற பரந்த மற்றும் பன்முகத்தன்மை கொண்ட ஒரு நாட்டில் ஆங்கிலம் வெறும் மொழி மட்டுமல்ல. அது ஒரு ஒருங்கிணைப்பு பாலம்.

நாட்டில் உள்ள விளிம்பு நிலை மக்கள் தங்கள் வாழ்வை கட்டாயம் வாழ வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அத்தகைய லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு ஆங்கிலம் முன்னேற்றவும், இந்தியாவை உலகத்துடன் இணைக்கவும் ஒரு கருவியாக பயன்படுகிறது. ஆங்கிலம் யாரையும் வெறும் இந்தியர்களாக குறைக்காது. மாறாக, ஆங்கிலம் உலக மயமாக்கப்பட்ட உலகுக்கு இந்தியர்களை தயார் செய்யவும், இணைக்கவும் உதவுகிறது. ஆங்கிலம் பேசுபவர்களை அவமானப்படுத்துவது, வரலாற்றை புறக்கணிப்பதற்கும், முன்னேற்றத்தை குறை மதிப்பிடுவதற்கும் சமம்” என பதிலடி கொடுத்துள்ளார்.