Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வடக்கு மண்டலத்தில் சிறந்த காவல் நிலையமாக முதலிடம் பிடித்து சாதனை திருத்தணி காவல் நிலையத்திற்கு ‘தமிழ்நாடு முதலமைச்சரின் கோப்பை’: காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் வழங்கினார்

திருத்தணி: தமிழ்நாடு காவல்துறையின் வடக்கு மண்டலத்தில் சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்ட திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி காவல் நிலையத்திற்கு ‘தமிழ்நாடு முதலமைச்சரின் கோப்பை’யை டிஜிபி சங்கர் ஜிவால் வழங்கி கவுரவித்தார். தமிழ்நாடு காவல்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் மேம்பட்ட சேவையை மக்களுக்கு வழங்குவதை ஊக்குப்படுத்தும் வகையில் ஆண்டு தோறும் சிறப்பாக செயல்படும் 3 காவல் நலையங்கள் தேர்ந்தேடுக்கப்பட்டு சிறந்த காவல் நிலையங்களுக்கான ‘தமிழ்நாடு முதலமைச்சரின் கோப்பை’ வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி ஒரு குழு அமைக்கப்பட்டு காவல் நிலையங்களில் திறன்மேம்பாடு மற்றும் சேவை உள்ளிட்ட பல்வேறு அளவிடுகளின் அடிப்படையில் சிறந்த காவல் நிலையங்கள் கண்டறியப்பட்டு தரவரிசைப்படுத்தி குடியரசு தினத்தன்று அதில் 3 இடங்கள் பெற்ற குறிப்பாக முதலிடத்தை மதுரை மாநகர சி3 எஸ்.எஸ்.காலினி காவல் நிலையம், இரண்டாவது இடத்தை நாமக்கல் மாவட்டம் நாமக்கல் காவல் நிலையம், மூன்றாவதாக திருநெல்வேலி மாநகர, பாளையம்கோட்டை காவல் நிலையம் இடம் பெற்றுள்ளது. இந்த 3 காவல்நிலையங்களுக்கும் முதல்வர் கோப்பைகள் வழங்கப்பட்டன.

அதன் தொடர்ச்சியாக மாவட்டம், மாநகரங்கள் தோறும் காவல் நிலையங்கள் தரவரிசைப்படுத்தப்பட்டு மாவட்ட, மாநகர அளவில் முதல் இடம் பிடிக்கும் காவல் நிலையங்களுக்கு கோப்பைகள் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் நேற்று வடக்கு மண்டலத்தில் உள்ள 10 மாவட்டங்களில் முதல் இடத்தை திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி காவல் நிலையம், இரண்டாவது இடத்தை திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையம், மூன்றாவது இடத்தை திருப்பத்தூர் மாவட்டம்,

திருப்பத்தூர் நகர காவல் நிலையம், நான்காவது இடத்தை ராணிப்பேட்டை மாவட்டம் , ராணிப்பேட்டை காவல் நிலையம், ஐந்தாம் இடத்தை வேலூர் மாவட்டம், காட்பாடி காவல் நிலையம், ஆறாம் இடத்தை கடலூர் மாவட்டம் திருப்பாபுலியூர் காவல் நிலையம், ஏழாம் இடத்தை விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம் தாலுக்கா காவல் நிலையம், எட்டாம் இடத்தை செங்கல்பட்டு மாவட்டம்,

செங்கல்பட்டு நகர காவல் நிலையம், ஒன்பாதம் இடத்தை காஞ்சிபுரம் மாவட்டம், சிவகாஞ்சி காவல் நிலையம், பத்தாம் இடத்தை கள்ளக்குறிச்சி மாவட்டம், எலவனாசூர் கோட்டை காவல் நிலையம் இடம் பெற்றுள்ளது. அதில் முதல் இடம் பிடித்த திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி காவல் நிலையத்திற்கு டிஜிபி சங்கர் ஜிவால் ‘தமிழ்நாடு முதலமைச்சரின் கோப்பை’யை நேற்று வழங்கி பாராட்டினார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.