மும்பை: 2025 மகளிர் உலக கோப்பை இறுதி போட்டி நவிமும்பையில் உள்ள மைதானத்தில் நடந்தது. போட்டியை இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா, தனது மனைவி ரித்திகா சஜ்தேவுடன் விஐபி அறையில் அமர்ந்து ரசித்துக் கொண்டிருந்தார். அவர்களுக்கு அருகில் நீதா அம்பானியும் அமர்ந்திருந்தார். போட்டி விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த நேரத்தில், நீதா அம்பானி தனது செல் போனை பயன்படுத்திக் கொண்டிருந்தார்.
அப்போது, அவருக்கு அருகில் அமர்ந்திருந்த ரோஹித் சர்மா, ஆர்வத்துடன் அவரது செல் போன் திரையை பலமுறை எட்டிப் பார்த்தார். இந்தக் கலகலப்பான தருணம், தொலைக்காட்சி கேமராக்களில் பதிவாகி, நொடிப்பொழுதில் சமூக வலைதளங்களில் வைரலானது. ரசிகர்கள் இந்த வீடியோவைப் பகிர்ந்து, நகைச்சுவை மீம்ஸ்கள் மற்றும் கமெண்ட்களால் சமூக வலைதளத்தை தெறிக்கவிட்டனர். ‘‘மும்பை இந்தியன்ஸ் அணியின் அடுத்த ஏலப் பட்டியலை நீதா மேடம் பார்க்கிறார்களா என ரோஹித் சரிபார்க்கிறார்’’என்றும், ‘‘இப்ப மெசேஜ் பண்ணாத, ரோஹித் பக்கத்துல இருக்கான்!’’ என்றும் ரசிகர்கள் நகைச்சுவையாகப் பதிவிட்டு வருகின்றனர்.
