ஓசூர்: கர்நாடகா மாநிலம் பெல்காம் பகுதியிலுள்ள மடத்திலிருந்து ஆச்சாரியர் சூர்யசாகர் முனிமகராஜ், ததீத் சாகர் முனிமகராஜ் ஆகியோர் நிர்வாணஆன்மிக நடைபயணமாக நேற்று முன்தினம் புறப்பட்டு நேற்று காலை பெங்களூரு வழியாக நேற்று மதியம் ஓசூரை வந்தடைந்தனர்.
அத்திப்பள்ளி எல்லையில் இருந்து தமிழக போலீசார் சாதுக்களுக்கு பாதுகாப்பாக வந்தனர். வழிநெடுகிலும் பொதுமக்கள் ஏராளமானோர், அவர்களிடம் ஆசி பெற்றனர். தொடர்ந்து கிருஷ்ணகிரிக்கு நடைபயணம் மேற்கொண்ட சாதுக்கள், திருவண்ணாமலை வழியாக வந்தவாசியை அடைகின்றனர். அங்கிருந்து திருமலை மடத்திற்கு செல்கின்றனர்.


