சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரத்தில் போலீசார் விசாரணையில் உயிரிழந்த அஜித்குமார் குடும்பத்தினரை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது தாயார் அன்னம்மாளுடன் நேற்று சந்தித்து ஆறுதல் கூறி ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கினார். பின்னர் சீமான் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘ஒரு இளைஞனை போலீசார் அடித்தே கொலை செய்துள்ளனர்.
உயிர் பிரியும் வரை எவ்வளவு கொடூரமாக தாக்கியிருப்பார்கள். அஜித்குமார் மரண வலியை எப்படித் தாங்கியிருப்பார் என எண்ணிப்பாருங்கள். புகார் அளித்த நிகிதா மீது பல மோசடி வழக்குகள் உள்ளன. நிகிதாவை ஏன் கைது செய்து போலீசார் விசாரிக்கவில்லை? மாயமாக நகை மீட்கப்பட்டதா? நிகிதா தனது அதிகாரத்தையும், அரசியல் செல்வாக்கையும் பயன்படுத்தியுள்ளார். சிபிஐ விசாரணை மட்டும் உண்மைச் சொல்கிறதா என பார்ப்போம். ’’ என்றார்.


