Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

யூடியூபர் குறித்து தகாத வார்த்தையில் சாட்டை துரைமுருகனிடம் பேசிய புழல் ஜெயிலர்: சமூக வலைதளங்களில் ஆடியோ வைரல்

சென்னை: யூடியூபர் குறித்து தகாத வார்த்தையில் புழல் ஜெயிலர் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சாட்டை துரைமுருகனிடம் பேசிய ஆடியோ சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது. அந்த ஆடியோவில் அவர்கள் பேசிய விவரம்: புழல் ஜெயிலர்: தயவு செய்து என்னை தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம், மனதில் பட்டதை உங்களிடம் ஓப்பனாக சொல்லிட்டேன். இந்த மாதிரியான பசங்ககெல்லாம் 1008 பேர் ஜெயிலில் அட்மிஷன் அடிவாங்கிறவர்கள், இவங்கங்கிட்ட போயிட்டு நம்ம ஏதோ வீடியோவை போட்டு எனக்கே ஒரு மாதிரியாக சங்கட்டமாக உள்ளது.

அண்ணன்ட்டதான் சொல்றேன், அண்ணே நீங்க எப்படி எடுத்தாலும் சரி தான், இந்த மாதிரியான விஷயத்தில் நாம்மளே வளர்த்து விடக் கூடாது? நிறைய பேர் சீமான் அண்ணனை வைத்து வளர்ந்து நமக்கே எதிர்ப்பாக திரும்பிட்டாங்க. எப்படிணே சொல்றது எனக்கு ரொம்ப வருத்தமாக உள்ளது. இந்த மாதிரியான வீடியோ அவர்களுக்கு தான் பயன்படும், நமக்கு பயன் படாது என்று நினைக்கிறேன். நான் உங்களை சாதாரணமாக, கீழே இருந்து பார்க்கிறேன், பார்க்கும் போது சாட்டையில் இந்த மாதிரியான வீடியோ வருதா? நான் மட்டும் சொல்லவில்லை, நம்மளை சுற்றி இருக்கிறவர்கள் சொல்கிறார்கள்.

சாட்டை துரைமுருகன்: இவன்கள் பின்னாடி இருக்கிறார்களே பாலோவர்ஸ் கூட்டம் எல்லாம் அனைவரும் பெண்கள், 10 லட்சம் பேர் இன்ஸ்டாகிராமில் பாலோ பண்ணுகிறார்கள். அடிக்கும் போது தான் அந்த ஆடியன்ஸ் நம்ம பக்கம் வருவான்கள்.

ஜெயிலர்: நீங்கள் சொல்வது சரிணே? இல்லேணு சொல்லல, சின்ன, சின்ன நம்ம தம்பிகளை வைத்து அடிக்க சொல்லுங்கணே, நீங்கள் அடித்தால் அது எனக்கு நல்லா தெரியவில்லை, நான் இவனை பார்த்ததே இல்லை, யாருனே தெரியாது பார்த்தால் சில்லறை (தகாத வார்த்தையில்) ...... மாதிரி தெரிகிறான். சாட்டை வந்து அடுத்த ஒரு லெவலுக்கு போன பிறகு, இவன் ஒரு ஆளுனு, சாட்டையில் இவனை பார்த்தவுடன் வெறுப்பாகி போச்சு, யாருடா இவன், இவனை போட்டு வச்சிருக்கிறாரே என்று நினைத்தேன்.

பெரிய, பெரிய அரசியல், மற்ற விஷயங்கள் பேசக்கூடிய இடத்தில் வந்து இவன் ஒரு சில்லறை (தகாத வார்த்தையில்)........ இவனை ஏண்டா போடுகிறார் என்று உள்ளே போய் பார்த்தால், ஔரலா இருக்கு, இது கொஞ்சம் கஷ்டமாக தான் இருக்கிறது. என்னை பொறுத்தவரை இவனை கண்டு கொள்ளவே கூடாது. நீங்கள் போட்டதினால் இதுல ஒரு பிரபலம் ஆனது போல் அவனுக்கே தோன்றும், வேறு எதுக்கும் சொல்லவில்லை. இதில் எனக்கு விருப்பம் இல்லைணே, அதான் மெசேஜ் போட்டேன். தவறாக நினைக்க வேண்டாம். இந்த மாதிரியான சில்லறையை நாமளே வளர்த்து விடக்கூடாது, சில்லறை வந்து சில்லைறையுடன், சில்லறையாக இருந்து போகட்டும் நமக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லை, மற்றதை பார்த்துக் கொள்ளுங்கள், தவறாக நினைக்க வேண்டாம்.. - இப்படி சாட்டை துரைமுருகன், புழல் ஜெயிலர் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இவர்கள் போன்ற அதிகாரிகள்தான் முக்கிய தகவல்களையும் வெளியில் கசிய விடுவார்கள் என்று அதிகாரிகள் கருதுகின்றனர்.