திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோழிக்கோட்டில் கடந்த சில மாதங்களாக பூட்டிக்கிடக்கும் வீடுகளில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வந்தன. தனிப்படையினர் நடத்திய விசாரணையில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வரும் ஆசாமி கக்கோடி பகுதியில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வரும் அகில் (33) என்பது தெரியவந்தது.
இதையடுத்து தனிப்படையினர் நேற்று அவரை கைது செய்தனர். தனக்கு ஏகப்பட்ட கடன்கள் இருப்பதாகவும், அதை தீர்ப்பதற்காகவே திருட்டில் இறங்கியதாகவும், யூடியூப் பார்த்துத் தான் திருடுவது எப்படி என்பதை தெரிந்து கொண்டதாகவும் போலீசாரிடம் கூறினார். இதையடுத்து விசாரணைக்குப் பின் போலீசார் அகிலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.