அரியலூர்: சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்த வாலிபருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து அரியலூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தஞ்சை மாவட்டம் அணைக்கரையை சேர்ந்த முருகேசன் மகன் அன்பரசு(23). இவர் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து, கடந்த 4-10-2025 அன்று அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அரியலூர் மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் நீதிபதி மணிமேகலை நேற்று தீர்ப்பு அளித்தார். அன்பரசுக்கு போக்சோ சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டார். இதையடுத்து அன்பரசு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.