பெரம்பூர்: மதுபானம் தர மறுத்ததால் வாலிபரின் கழுத்ைத பிளேடால் அறுத்த 3 பேரை கைது செய்தனர். சென்னை கொருக்குப்பேட்டை கண்ணகி நகர் 4வது தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (23). இவர் கூலி தொழிலாளி. கடந்த 7ம் தேதி இரவு வேலை முடித்துவிட்டு எழில் நகர் ரயில்வே தண்டவாளம் ஓரமாக சென்று மது அருந்தியுள்ளார். அப்போது அங்குவந்த 3 பேர், மணிகண்டனிடம் மது கேட்டுள்ளனர்.
அவர் தன்னிடம் மதுபானம் இல்லை என்று கூறியதால் அவர்கள் தாங்கள் வைத்திருந்த பிளேடால் மணிகண்டனின் கழுத்தை அறுத்ததுடன் கல்லால் அடித்துவிட்டு சென்றுவிட்டனர். இதில் கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்ட மணிகண்டனை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கின்றனர்.
இதுகுறித்து கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து புதுவண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த கருப்பசாமி (19), தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்த சஞ்சய் (19), தட்சிணாமூர்த்தி (20) ஆகியோரை பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.