சிட்னி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நடந்த 3வது ஒருநாள் போட்டியில் கேட்ச் பிடிக்கும்போது இந்திய வீரர் கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் ஐயருக்கு விலாஎலும்பில் காயம் ஏற்பட்டு, சிட்னியில் உள்ள மருத்துவமனையில் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டார். தற்போது உடல்நலம் தேறி உள்ள நிலையில் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்நிலையில், ஸ்ரேயாஸ் ஐயர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘நான் தற்போது குணமடைந்து வருகிறேன். எனக்கு கிடைத்த அனைத்து அன்பான வாழ்த்துகளுக்கும், ஆதரவுக்கும் நான் மிகவும் நன்றி உள்ளவனாக இருக்கிறேன். இது உண்மையிலேயே நிறைய அர்த்தம் தருகிறது. என்னை உங்கள் நினைவுகளில் வைத்திருந்ததற்கு நன்றி‘ என்று கூறி உள்ளார். ஸ்ரேயாஸ் ஓய்வில் இருக்க டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளதால் 2 மாதங்கள் அவரால் விளையாட முடியாது.
+
Advertisement 
 
  
  
  
   
