தீய சக்திகளை அழிக்க ருத்ராட்சம் தருவதாக கூறி இளம்பெண்ணை அழைத்து சென்று கோயில் பூசாரி உல்லாசம்: பின்தொடர்ந்து வீடியோ எடுத்து ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டிய கணவன்
சென்னை: தீய சக்திகளை அழிக்கும் ருத்ராட்ச மாலை தருவதாக இளம்பெண்ணை வடபழனிக்கு அழைத்து சென்று கோயில் பூசாரி உல்லாசமாக இருந்துள்ளார். இருவரும் நெருக்கமாக இருந்ததை வீடியோ எடுத்து தனது மனைவியிடமே ரூ.10 லட்சம் கேட்டு கணவன் மிரட்டிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்தவர் ராணி (27), (பெயர் மாற்றப்பட்டுள்ளது). திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார்.
வழக்கமாக ராணி வீட்டின் அருகே உள்ள ஆதிபூரீஸ்வரர் கோயிக்கு சென்று வருவது வழக்கம். அப்போது ராணிக்கு, கோயில் பூசாரி அசோக் பாரதி (39) பழக்கமானார். இந்த பழக்கத்தால் தனது குடும்பத்தில் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வருகிறது. கணவர் தன்னிடம் நெருக்கமாக இருப்பதில்லை என்று கூறியுள்ளார். அதற்கு பூசாரி அசோக் பாரதி, உங்கள் வீட்டில் தீய சக்திகள் இருக்கிறது. அதை விரட்ட வேண்டும். அப்போது தான் உனது கணவர் உன்னிடம் நெருக்கமாக இருப்பார் என்று கூறியுள்ளார். அதற்கு ராணி, இதற்கு பரிகாரம் இருக்கிறதா என்று கேட்டுள்ளார். அதற்கு கோயில் பூசாரி, தீய சக்திகளை அழிக்கும் ருத்ராட்ச மாலை அணிந்தால் தீய சக்திகள் உன்னிடம் நெருங்காது என கூறியுள்ளார்.
உடனே இளம்பெண், எனக்கு தீய சக்திகளை அழிக்கும் ருத்ராட்ச மாலை வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு கோயில் பூசாரி வடபழனி முருகன் கோயிலில் நான் கொடுக்கும் ருத்ராட்ச மாலையை முருகன் முன்பு படைத்து அதை நீ அணிந்தால் உன்னை தீய சக்தி அணுகாது என்று கூறியுள்ளார். அதன்படி, கடந்த 6ம் தேதி இளம்பெண் ராணி மற்றும் கோயில் பூசாரி அசோக் பாரதி ஆகியோர் வடபழனி முருகன் கோயிலுக்கு சென்று ருத்ராட்ச மாலை வாங்கியுள்ளனர்.
பிறகு முருகன் முன்பு படைக்க கோயிலுக்கு சென்ற போது, கோயில் நடை மூடப்பட்டிருந்தது. இதனால் பூசாரி கோயில் திறக்கும் போது வரலாம். அதுவரை எனது உறவினர் வீட்டிற்கு சென்று சிறிது நேரம் இருந்துவிட்டு வரலாம் என பூசாரி அழைத்து சென்றுள்ளார். கோயில் பூசாரி திட்டமிட்டு இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருக்கும் நோக்கில் வடபழனி பக்தவச்சலம் காலனியில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது உறவினர்கள் வீட்டில் யாரும் இல்லை. வீட்டின் சாவியும் பூசாரி அசோக் பாரதியிடம் தான் இருந்தது. இருவரும் வீட்டிற்குள் சென்றுள்ளனர். அப்போது இளம்பெண் ராணிக்கு பாலியல் உணர்வுகளை தூண்டி அவருடன் பூசாரி உல்லாசமாக இருந்துள்ளார்.
இதற்கிடையே, ராணியின் கணவர் அடிக்கடி கோயில் பூசாரியுடன் தனது மனைவி நெருக்கமாக பழகி வந்ததால் சந்தேகமடைந்து, ராணியை வீட்டில் இருந்து அவருக்கு தெரியாமல் பின்தொடர்ந்து வந்துள்ளார். பிறகு கோயில் பூசாரி உறவினர் வீட்டில் தனது மனைவியுடன் உல்லாசமாக இருப்பதை கையும் களவுமாக பிடித்து மனைவி ராணியை அடித்துள்ளார்.
பிறகு மீண்டும் கோயில் பூசாரியுடன் உல்லாசமாக இருக்க கோரி வலியுறுத்தி அதை தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.பின்னர் அவரது மனைவி ராணி மற்றும் கோயில் பூசாரி ஆகியோரிடம் உங்கள் ஆபாச வீடியோ என்னிடம் உள்ளது. மனைவியிடம், உனது பெற்றோரிடம் இந்த வீடியோவை காட்டி உன்னை அசிங்கப்படுத்திவிடுவேன். அப்படி வீடியோவை காட்ட கூடாது என்றால் எனக்கு ரூ.10 லட்சம் பணம் கொடுக்க வேண்டும் என்று மனைவி ராணியிடமே மிரட்டியுள்ளார்.
இதை சற்றும் எதிர்பார்க்காத ராணி, கோயில் பூசாரியுடன் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தார். ஒரு கட்டத்தில் ராணி, தீய சக்திகளை அழிக்கும் ருத்ராட்ச மாலை வாங்கி தருவதாக ஆசைவார்த்தை கூறி உறவினர் வீட்டிற்கு அழைத்து சென்று தன்னை பாலியல் பலத்காரம் செய்துவிட்டதாக கோயில் பூசாரி அசோக் பாரதி மீதும், கோயில் பூசாரியுடன் உல்லாசமாக இருக்க வைத்து அதை செல்போனில் வீடியோ எடுத்து ரூ.10 லட்சம் பணம் கேட்டு மிரட்டும் கணவர் மீதும் சென்னை தெற்கு மண்டல இணை கமிஷனர் கல்யாணிடம் புகார் அளித்தார்.
அந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க இணை கமிஷனர் கல்யாண், வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி மகளிர் போலீசார் புகார் அளித்த இளம்பெண்ணிடம் புகார் மனுக்கள் பெற்று விசாரணை நடத்தினர். முதற்கட்டமாக கோயிலுக்கு வந்த இளம்பெண்ணுடன் கோயில் பூசாரி நெருங்கி பழகி வந்துள்ளார். ஆனால் பூசாரியால் இளம்பெண்ணை தனியாக அழைத்து செல்ல முடியாத நிலையில் இருந்துள்ளார். பிறகு இளம்பெண்ணிடம் தீய சக்திகளை அழிக்கும் ருத்ராட்ச மாலை வாங்கி தருவதாக உறவினர் வீட்டிற்கு அழைத்து சென்று கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்தது விசாரணையில் தெரியவந்தது.
அதைதொடர்ந்து பள்ளிக்கரணை ஜல்லடியன்பேட்டை சுப்பிரமணி 2வது தெருவை சேர்ந்த கோயில் பூசாரி அசோக் பாரதி (39) மீது பிஎன்எஸ் 64 சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இளம் பெண்ணின் கணவரிடம், வடபழனி போலீசார் ரூ.10 லட்சம் பணம் கேட்டு மிரட்டியது குறித்து தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.கோயில் புசாரியுடன் மனைவி உல்லாசமாக இருந்த வீடியோவை காட்டி கணவனே ரூ.10 லட்சம் பணம் கேட்டு மனைவியை மிரட்டியது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.