கர்நாடக: கர்நாடக மாநிலம் சென்னநாராய பட்டணாவை சேர்ந்தவர் ரேகா. இவருக்கு திருமணம் ஆகி 13 வயதில் ஒரு மகள் உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக ரேகா கணவனை பிரிந்து இருக்கிறார். துமகுரு மாவட்டத்தில் உள்ள சிராவை சேர்ந்தவர் லோஹித்ஷ்வா. 43 வயதான இவரும் மனைவியை பிரிந்தவர். இருவரும் ஒன்றரை வருடங்களாக காதலித்து வந்திருக்கிறார்கள்.
மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு பெங்களூருக்கு குடி போயிருக்கிறார்கள். ரேகா மாகடி சாலையின் அருகே உள்ள ஒரு கால் சென்டரில் பணிபுரிந்து வந்தார். தனது பரிந்துரையின் பெயரில் அதே அலுவலகத்தில் தனது கணவருக்கும் கார் ஓட்டுநர் வேலையை வங்கிக்கொடுத்துள்ளார்.
என்னதான் ஒன்றரை வருடங்களாக இருவரும் காதலித்தாலும் திருமணம் ஆனதில் இருந்து லோஹித்ஷ்வா ரேகாவின் நடவடிக்கையில் சந்தேகம் பட்டிருக்கிறார். வேறுஒருவரோடு அவருக்கு தொடர்பு இருப்பதாக நினைத்து சண்டையிட்டு வந்திருக்கிறார். இதனால் கணவன் மனைவிக்கிடைய சுமுகமான உறவு இல்லை. சம்பவத்தன்று காலை ரேகாவும் அவரது மகளும் சாலையை கடக்க பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தபோது திடீர் என அங்கு வந்த லோஹித்ஷ்வா ரேகாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இருவரும் மாறிமாறி கடுமையாக பேச பொறுமையை இழந்த லோஹித்ஷ்வா மறைத்து வைத்திருந்த கத்தியால் கண்முடிதனமாக குத்தியுள்ளார். அருகில் இருந்த ரேகாவின் மகள் இந்த தாக்குதலை தடுக்க முயன்றும் எந்த பலனும் இல்லை. அக்கம்பக்கத்தினர் சுதாரித்து கொண்டு அங்கு வருவதற்குள் லோஹித்ஷ்வா அந்த இடத்தை விட்டு தப்பி ஓடியுள்ளார். கத்தி குத்தில் படுகாயம் அடைந்து ரத்தவெள்ளத்தில் சரிந்த ரேகா அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்டர்.
உடனடியாக மருத்துவ நடவடிக்கை மேற்கொள்ளபட்டும். அங்கு அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். அவரது உடலில் குறைந்தது 11 முறை கத்தியால் குத்தப்படத்திற்கான காயங்கள் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து நடந்த தேடுதல் வேட்டையில் போலீசார் லோஹித்ஷ்வா கைது செய்து விசாரித்து வருகின்றனர். முழுமையான விசாரணைக்கு பிறகே கொலைக்கான முழுகாரணமும் தெரியவரும்.