ஸ்ரீவில்லிபுத்தூர்: அருப்புக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (42). மதுரை மாவட்டம், பேரையூர் சேர்ந்தவர்கள் பிரபாகரன் (26), விஜய் (22), ராம்குமார் (20), ஜெயக்குமார் (23), அழகு முருகன் (19). இவர்கள் 6 பேரும் 2022ம் ஆண்டு ஒருவரை தாக்கி விட்டு இளம்பெண்ணை காரில் கடத்தி சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து நகைகளையும் பறித்து சென்றதாக போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் நேற்று நீதிபதி புஷ்பராணி அளித்த தீர்ப்பில், 6 பேரும் ஆயுட்காலம் (சாகும் வரை) முழுவதும் சிறையில் இருக்க உத்தரவிட்டார். மேலும் 6 பேருக்கும் சேர்த்து ரூ.4.15 லட்சம் அபராதம் விதித்தும் உத்தரவிட்டார்.

