Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

லாட்ஜில் இளம்பெண் கொலை

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அருகே லாட்ஜில் இளம்பெண் கொல்லப்பட்ட நிலையில் கிடந்தார். இது தொடர்பாக லாட்ஜ் ஊழியரை போலீசார் தேடி வருகின்றனர். கேரள மாநிலம் கோட்டயம் அருகே புதுப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் ஜோபி ஜார்ஜ் (30). திருவனந்தபுரம் அருகே ஆற்றிங்கல் பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் வேலை செய்து வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு தனது மனைவி என்று கூறி ஒரு இளம்பெண்ணை லாட்ஜுக்கு அழைத்து வந்தார். 2 பேரும் லாட்ஜில் உள்ள ஒரு அறையில் தங்கி இருந்தனர். இந்தநிலையில் நேற்று அவர்கள் தங்கி இருந்த அறைக்கதவு நீண்ட நேரமாக திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த லாட்ஜ் ஊழியர்கள் ஆற்றிங்கல் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் விரைந்து வந்து அறைக்கதவை உடைத்து திறந்து பார்த்துள்ளனர். அப்போது இளம்பெண் உடலில் காயங்களுடன் சடலமாக கிடந்தது தெரியவந்தது.

ஜோபி ஜார்ஜை காணவில்லை. லாட்ஜில் இருந்த கண்காணிப்பு கேமராவை பரிசோதித்து பார்த்த போது ஜோபி ஜார்ஜ் அதிகாலை சுமார் 3 மணியளவில் அறையை விட்டு வெளியே சென்றது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து இளம்பெண்ணின் உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். போலீசாரின் விசாரணையில் கொலை செய்யப்பட்டது கோழிக்கோடு மாவட்டம் வடகரையை சேர்ந்த இளம்பெண் அஸ்மினா என்பது தெரியவந்தது. ஜோபி ஜார்ஜும், அஸ்மினாவும் இதற்கு முன்பு காயங்குளத்தில் ஒரே ஓட்டலில் பணிபுரிந்து வந்து உள்ளனர். 2 பேருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் கொலை நடந்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் ஜோபி ஜார்ஜை தேடிவருகின்றனர்.