Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

ஜெஇஇ மெயின் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்

ஐஐடி,ஐஐஐடி,என்ஐடி உள்ளிட்ட உயர்தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் 2026ஆம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான ஜெஇஇ மெயின் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பை தேசியத் தேர்வு முகமை (National Testing Agency - NTA) அறிவித்துள்ளது. இதுதொடர்பாகத் தேசியத் தேர்வு முகமை வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ஐஐடி, ஐஐஐடி,என்ஐடி உள்ளிட்ட உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் பி.இ, பி.டெக் சேர்க்கைக்கான ஜெஇஇ மெயின் தேர்வு தாள்-1ம், பி.ஆர்க், பி.பிளானிங் சேர்க்கைக்கான ஜெஇஇ மெயின் தேர்வு தாள்-2ம் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படுகின்றன. இந்த நுழைவுத்தேர்வு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் மற்றும் ஏப்ரல் மாதம் என இரண்டு முறை நடத்தப்படும். அதன்படி 2026-2027ம் கல்வி ஆண்டில் மேற்கண்ட படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான முதலாவது ஜெஇஇ மெயின் தேர்வு 2026ஆம் ஆண்டு ஜனவரி 21 முதல் 30ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஐஐடி,ஐஐஐடி,என்ஐடி உள்ளிட்ட உயர்தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் சேர விரும்பும் பிளஸ் 2 மாணவர்கள் www.nta.ac.in என்ற இணையதள முகவரி மூலம் நவம்பர் 27ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.