ஏமனில் மரண தண்டனை விதிக்கப்பட்ட செவிலியர் நிமிஷா பிரியா தொடர்பாக கருத்துகளை வெளியிட தடைக் கோரிய மனு தள்ளுபடி!!
டெல்லி : ஏமனில் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திய செவிலியா் நிமிஷா பிரியா குறித்து ஆதாரமற்ற கருத்துகளை வெளியிட தடை விதிக்கக்கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஏமன் நாட்டு விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட வேண்டாம் என்ற ஒன்றிய அரசு வாதத்தை ஏற்று மனு தள்ளுபடி செய்யப்பட்டது.