திருப்பூர்: திருப்பூரில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் செயல்படுகின்றன. பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளாக நூல் இருந்து வருகிறது. நூல் விலை மற்றும் மூலப்பொருட்களின் விலையை கருத்தில் கொண்டு ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஆகஸ்ட் மாதத்திற்கான நூல் விலையை நூற்பாலைகள் அறிவித்தன. இதில், ஒரு கிலோவுக்கு ரூ.5 உயர்த்தப்பட்டது. அதன்படி, கிலோவுக்கு 10-ம் நம்பர் கோம்டு நூல் ரூ.183, 16-ம் நம்பர் ரூ.193, 20-ம் நம்பர் கோம்டு நூல் ரூ.251, 24-ம் நம்பர் ரூ.263, 30-ம் நம்பர் ரூ.273, 34-ம் நம்பர் ரூ.293, 40-ம் நம்பர் ரூ.311, 20-ம் நம்பர் செமி கோம்டு ரூ.248, 24-ம் நம்பர் ரூ. 258, 30-ம் நம்பர் ரூ.268, 34-ம் நம்பர் ரூ.281, 40-ம் நம்பர் ரூ.301-க்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்தனர்.
Advertisement