யமஹா ஆர்3 மற்றும் எம்டி-03 மோட்டார் சைக்கிள்களின் விலை ஜிஎஸ்டி மாற்றத்தால் ரூ.20,000 வரை குறைக்கப்பட்டுள்ளதாக யமஹா நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: ஜிஎஸ்டியில் மேற்கொள்ளப்பட்ட மாற்றத்துக்குப் பிறகு ஆர்3 ரூ.3.39 லட்சம், எம்டி-03 ரூ.3.29 லட்சம் ஆக குறைந்துள்ளது. ஆர்15 மோட்டார் சைக்கிள்களின் ஷோரூம் விலை ரூ.17,581 குறைக்கப்பட்டு, ரூ.1,94,439 முதல் ரூ.2,12,020 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எம்டி 15 விலை ரூ.14,964 குறைக்கப்பட்டு ரூ.1,65,536 ஆகியுள்ளது. இதுபோல் ஏரோக்ஸ் 155 எஸ் விலை ரூ.12,753 குறைக்கப்பட்டு ரூ.1,41,137 ஆகவும், ரே இசட் ஆர் ரூ.7,759 குறைக்கப்பட்டு ரூ.86,001 ஆகவும், பேசினோ ரூ.8,509 குறைக்கப்பட்டு ரூ.94,281 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நிறுவன தரப்பில் கூறப்பட்டுள்ளது.
+
Advertisement
