யமஹா நிறுவனம், புதிய எப்இசட் எக்ஸ் ஹைபிரிட் மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. இதில் 149 சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 12.4 எச்பி பவரையும், 13.3 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் உள்ளது. இதில் உள்ள ஹைபிரிட் அம்சம், எரிபொருள் சிக்கனம் கருதி மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளது.
மற்றபடி இன்ஜின் திறனில் எந்த மாற்றமும் இருக்காது. 4.2 அங்குல வண்ண டிஎப்டி டிஸ்பிளே உள்ளது. ஷோரூம் விலை சுமார் ரூ.1.49 லட்சம். ஸ்டாண்டர்டு எப்இசட் எக்ஸ் வேரியண்டடை விட சுமார் ரூ.20,000 அதிகம். எப்இசட் எஸ் ஹைபிரிட் பைக்கை விட சுமார் ரூ.5,000 குறைவு.