யமஹா நிறுவனம், எக்ஸ்எஸ்ஆர் 155 மோட்டார் சைக்கிளுக்கான ஸ்கிராம்ப்ளர் மற்றும் கபே ரேசர் கிட்களுக்கான விலைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. ஸ்கிராம்ப்ளர் கிட் விலை சுமார் ரூ.12,330 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிளை ஸ்கரீன், பார் என்ட் மிரர்கள், ஹெட்லைட் கவர், சைடு பேனல்கள் உள்ளிட்டவை அடங்கும்.
இதுபோல் கபே ரேசர் கிட் விலை சுமார் ரூ.11,915 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஸ்டெப்ட்டு சீட், லீவர் கார்டு, ஹெட்லைட் கவுல்களுக்கான பிராக்கெட் கிட் ஆகியவை இதில் அடங்கும். இதுதவிர தனித்தனி உதிரிபாகங்களாக சீட் கவர் ரூ.480, டாங்க் பேட் ரூ.400, பார் என்ட் மிரர் ரூ.3,080, பிளை ஸ்கிரீன் ரூ.3,290, ஹெட்லைட் கவர் ரூ.3,610, ரெடியேட்டர் கார்டு ரூ.1,330 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கிட் அல்லாமல் உதிரி பாகங்களாக இவற்றை வாங்கிக் கொள்ளலாம் என யமஹா நிறுவனம் அறிவித்துள்ளது.

