வுஹான்: வுஹான் மகளிர் ஓபன் டென்னிஸ் போட்டியில் சபலென்கா, பெகுலா காலிறுதிக்கு தகுதி பெற்றனர். சீனாவின் வுஹான் நகரில் வுஹான் ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த 3வது சுற்று ஆட்டத்தில் ஜெசிகா பெகுலா, எகடெரினா அலெக்ஸாண்ட் ரோவாவை 7-5, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்க ஓபன் சாம்பியனான அரினா சபலென்கா, லியுட்மிலா சாம்சோனாவை 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். இதன்மூலம் சபலென்காவின் வெற்றி 19வது போட்டியிலும் தொடர்கிறது. இதேபோல் மற்ற ஆட்டங்களில் நோஸ்கோவா, ரைபாகினாவவை 6-3, 6-4 என்ற செட் கணக்கிலும், பாலினி, டாசனை 3-6, 6-1, 3-1 என்ற செட் கணக்கிலும், ஜோவிக், சினியாகோவாவை 5-7, 3-6 என்ற செட் கணக்கிலும், சீக்மண்ட், பிரெச்வை 6-4, 7-6 என்ற செட் கணக்கிலும் வீழ்த்தினர்.
+
Advertisement