சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி முடிந்ததையடுத்து இந்த வாரத்துக்கான வீரர்கள், வீராங்கனைகள் தர வரிசை பட்டியல்களில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அதன்படி மகளிருக்கான ஒற்றையர் பிரிவு டபிள்யூடிஏ தரவரிசையில் சின்சினாட்டி சாம்பியன் இகா ஸ்வியடெக் ஒரு நிலை முன்னேறி மீண்டும் 2வது இடத்தை பிடித்துள்ளார்.
மேலும் 2வது இடத்தில் இருந்த அமெரிக்காவின் கோகோ காஃப் ஒரு நிலை பின்தங்கி 3வது இடத்துக்கு சரிந்துள்ளார். இந்த தொடரில் முன்னணி வீராங்கனைகள் பலரை வீழ்த்திய பிரான்சின் வர்வரா கிரசேவா (முன்னாள் ரஷ்ய வீராங்கனை) அதிகபட்சமாக 20 இடங்கள் முன்னேறி 83வது இடத்தை பிடித்துள்ளார். வீரர்களுக்கான ஏடிபி தரவரிசையில் மாற்றங்கள் ஏதுமில்லை.