ரியாத்: சர்வதேச மகளிர் டென்னிஸ் தரவரிசையில் டாப் 8 இடத்தில் உள்ள வீராங்கனைகள் மற்றும் இரட்டையரில் டாப் 8 ஜோடிகள் பங்கேற்கும் டபிள்யூடிஏ பைனஸ் சாம்பியன்ஷிப் தொடர் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடந்து வருகிறது. ஒற்றையர் பிரிவில் தலா 4 பேர் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்று நடத்தப்பட்டது. இரு பிரிவிலும் முதல் 2 இடம் பிடிப்பவர்கள் அரையிறுதிக்கு தகுதி பெறுவர். செரீனா வில்லியம்ஸ் பிரிவில் நடந்த போட்டியில் கஜகஸ்தானின் ரைபகினா- ரஷ்யாவின் எகடெரினா அலெக்ஸாண்ட்ரோவா மோதினர். இதில், 6-4, 6-4 என்ற செட் கணக்கில் ரைபகினா வெற்றி பெற்றார். 3 போட்டிகளிலும் வென்றதால் ரைபகினா அரையிறுதிக்கு முன்னேறினார். இதே பிரிவில் 4ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் அமண்டா அனிசிமோவா, 2ம் நிலை வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியா டெக்குடன் மோதினார். இதில் 6-7,6-4,6-2 என்ற செட் கணக்கில் அமண்டா அனிசிமோவா வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். 3 போட்டியில் 2ல் தோல்வியடைந்த இகா ஸ்வியாடெக் இந்த தொடரில் இருந்து வெளியேறினார்.
+
Advertisement
