உலக விண்வெளி வரலாற்றில் இந்தியாவின் பெயரை பொறித்த சுபான்ஷு சுக்லாவின் சாதனைக்கு வாழ்த்து: செல்வபெருந்தகை சமூக வலைதள பதிவு
சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை நேற்று தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: உலக விண்வெளி வரலாற்றில் இந்தியாவின் பெயரை பொறித்த குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லாவின் சாதனைக்கு மனமார்ந்த வாழ்த்துகள். சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை ஏந்தி, லட்சக்கணக்கான, குறிப்பாக விண்வெளி குறித்த ஆய்வு செய்ய வேண்டும் என்று கனவு காணும் இளம் இந்தியர்களுக்கு உத்வேகம் அளித்துள்ளீர்கள்.
உங்கள் துணிச்சலும், அர்ப்பணிப்பும், உழைப்பும், நம் நாட்டின் அறிவியல் சாதனைகளுக்குச் சிறந்த முன்னுதாரணமாகவும், இளைய தலைமுறைக்கு நம்பிக்கை அளிக்கக்கூடியதாகவும் இருக்கும். பாதுகாப்பாக பூமியை வந்தடைந்ததில் மகிழ்ச்சி. எதிர்கால பயணங்களுக்கும் முயற்சிகளுக்கும் வெற்றி பெற வாழ்த்துகள். ஆக்ஷன் மிஷன்-4 விஞ்ஞானிகளுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.