துபாய்: ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு பிப்., மார்ச் மாதங்களில் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன. போட்டியை நடத்தும் இந்திய, இலங்கை மற்றும் தரவரிசை படி 10 அணிகள் தகுதி பெற்றன.
இவை தவிர தகுதி சுற்று அடிப்படையில் கனடா, இத்தாலி, நெதர்லாந்து, நமீபியா, ஜிம்பாப்வேக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில், நேபாளம், ஓமன் அணிகளும் உலக கோப்பை தொடருக்கு தகுதி பெற்றுள்ளன. 19 அணிகள் தகுதி பெற்றுவிட்ட நிலையில் எஞ்சிய ஒரு இடத்துக்கு யுஏஇ, ஜப்பான், சமோவா, கத்தார் ஆகிய நாடுகள் இடையே போட்டி உள்ளது.